• September 2, 2023

சௌராஷ்டிரா கல்வி நிறுவனம் செய்தி

தேனி மாவட்டம் வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனம் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் Artificial intelligence and artificial intelligence tools என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க நடைபெற்றது.

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திருமதி SLJ.சுருதி முன்னா MBA அவர்களும் மற்றும் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் P.கனகராஜ் M.com.B.Ed.,M.Phil.,Ph.D அவர்களும் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தேசிய கருத்தரங்கினை துவக்கி வைத்தார்கள்.

கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராக சரவணன் நல்லு G.Tech solution software Engineer அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். தேசிய கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என கலந்து கொண்டார்கள்.

சிறப்பு அழைப்பாளரை தொடர்ந்து கணினி அறிவியல் துறை தலைவர் B.விஸ்வநாதன் M.S.,M.E.,Ph.D., அவர்கள் கருத்தரங்கின் தலைப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் கணினி அறிவியல் துறை மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தேசிய கருத்தரங்கில் கொடைக்கானல் கிறிஸ்டியன் கல்லூரியில் இருந்து வந்த பேராசிரியர் அவர்களும் மற்றும் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இருந்து வந்த பேராசிரியர் அவர்களும் இந்த தேசிய கருத்தரங்கு ஏற்பாடுகள் மிகவும் திருப்திகரமாகவும் பயனுள்ளதாகவும் எடுத்து கூறிய நிகழ்வினை உங்கள் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.அதோடு கல்லூரியில் Artificial intelligence club ஒன்றும் உருவாக்கப்பட்டது.

நன்றி.